படகு கவிழ்ந்து காணாமல் போன ஐவர் மீட்பு!
- Shan Siva
- 26 Nov, 2025
ஷா ஆலம், நவ 26: கடந்த ஞாயிற்றுக்கிழமை, புலாவ் கெத்தாம் பகுதியில் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து காணாமல் போன ஐந்து மீனவர்கள் திங்கள்கிழமை பிற்பகல் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
23 முதல் 57 வயதுடைய நான்கு உள்ளூர்வாசிகள் மற்றும் ஒரு வெளிநாட்டவர், படகு கவிழ்ந்தபோது அருகிலுள்ள கூண்டுக்கு நீந்திச் சென்ற பிறகு, மாலை 4.47 மணிக்கு புலாவ் கெத்தாம் அருகே கண்டுபிடிக்கப்பட்டனர் என்று மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) சிலாங்கூர் இயக்குநர் அப்துல் முஹைமின் முகமது சாலே கூறினார்.
அவர்கள் அனைவரும் PENGGALANG 31 படகு மூலம் கம்போங் தெலோக் நிபா மீனவர்களின் படகுத் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலும் நடவடிக்கைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார். மீன் கொட்டியதால் இரண்டு பேருக்கு கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



