பினாங்கில் தீபாவளி விற்பனை கட்டுப்பாடு-இந்திய வியாபாரிகளுக்கு மாநில அரசின் பெரும் ஆதரவு!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

ஜார்ஜ்டவுன், ஜூலை 21-

பினாங்கு மாநிலத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர இந்திய வியாபாரிகளை பாதுகாக்கும் நோக்கில், தீபாவளிக்கு முந்தைய மூன்று மாதங்களில் எந்தவொரு வியாபாரத் திருவிழா, சிறப்பு விற்பனை, கண்காட்சி போன்றவற்றையும் நடத்த முடியாதென மாநில அரசு அறிவித்த தீர்மானம், வணிக வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த முயற்சி, பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தலைமையிலான நிர்வாகம், அரசாங்கத் துறை தலைவர்கள் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு மற்றும் யபி ஜேசன் இங் ஆகியோர் இணைந்து எடுத்த முக்கியமான முடிவாகும்.

இந்த தீர்மானத்தை முழுமையாக வரவேற்ற பினாங்கு இந்தியர் வர்த்தக தொழிலியல் சங்கத் தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன்,குறிப்பாக 'இது வர்த்தகச் சரிவை தடுக்க உதவிகரமாக இருக்கும். ஜார்ஜ் டவுனில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் இதனால் நேரடி பயன் பெறுவர், எனக் குறிப்பிட்டார்.

அடிப்படை செலவுகளை சமாளிக்க முடியாத நிலை,வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரத் திருவிழாக்கள்,உள்ளூர்  வியாபாரிகளின் வாழ்வாதாரத்தில் கடும் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றன. வாடகை, ஊழியர் சம்பளம் உள்ளிட்ட கட்டாய செலவுகளை கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, உமையாள் நிறுவன உரிமையாளர் டத்தோ அசோக் குமார் வேதனை வெளியிட்டார். “விருப்பமுள்ள வெளிவாரிய வியாபாரிகளுக்கு புத்தாண்டு காலத்தில் வாய்ப்பு"

இந்த தடைகள் தீபாவளிக்கு முன்பாக மட்டுமே அமலில் இருக்கும் என்றும், ஆண்டின் பிற காலங்களில் வெளி மாநில வியாபாரிகளுக்கும் முழுமையான விற்பனை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் வர்த்தக சங்கம் உறுதியளித்துள்ளது.

இது பாதுகாப்பு நடவடிக்கை வர்த்தக சங்கம் வலியுறுத்தல்.'இந்த முடிவை வெளிமாநில வியாபாரிகள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பது அவசியம். உள்ளூர் தொழில்கள் தொடர்ந்து இயங்கவும், வாழ்வாதாரத் திடீர் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் இது ஒரு தவிர்க்கமுடியாத நடவடிக்கையாகும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம், உள்ளூர் வணிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வரலாற்றுப் புகழுடைய பயணத்தின் தொடக்ககட்டமாக பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *