இவ்வாண்டில் 4.43 மில்லியன் மதிப்புள்ள தீபாவளிப் பற்றுச் சீட்டுகள் 22,150 பேருக்கு வழங்கப்படும்!
- Muthu Kumar
- 11 Jul, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
ஷா ஆலம், ஜூலை 11
இவ்வாண்டில் கொண்டாடப்படவிருக்கும் தீபத் திருநாளை முன்னிட்டு அதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொண்ட 22,150 பேருக்கு 4.43 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச் சீட்டு கள் வழங்கப்படும் என்று டேவான் நெகிரி சிலாங்கூரில் நடை பெற்று வரும் மூன்றாவது கூட்டத் தொடரின் பதினைந்தாவது சட்ட மன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமானின் வேண்டுகோளை ஏற்று மாநில ரீதியில் இருக்கும் 56 சட்டமன்ற சேவை மையங்களில் மனு செய்து கொண்டுள்ள வசதி குறைந்த இந்திய குடும்ப உறுப்பினர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாநிலத்தில் சிறு தொழில் வியாபாரம் செய்ய நாட்டம் உடைய இந்தியர்களுக்கு ஐசீட் உதவிப் பொருள் பெறும் திட்டத்தின் வாயிலாக 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாநில அளவில் இருக்கும் தமிழ்ப் பள்ளி வளர்ச்சிக்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப் படும் வகையில் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
டிவெட் கல்வித் திட்டத்தின் வழி இளையோர் முன்னேற்றத்திற்காக இவ்வாண்டில் 16 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மந்திரி பெசார், சிலாங்கூர் வாழ் இந்தியர்களின் நலன் காக்க 14 மில்லியன் செலவிடப்படும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



