போலிஸ் நடவடிக்கையின் போது தப்பி ஓடிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மோதிக்கொண்டதில் அறுவர் காயம்; ஒரு மோட்டார்சைக்கிள் எரிந்தது

top-news
FREE WEBSITE AD

கோல திரெங்கானு, ஏப் 17: சட்டவிரோத தெருப் பந்தயங்களை ஒடுக்கும் நடவடிக்கையின்போது தப்பி ஓடிய ஆறு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில், ஒரு பைக் எரிந்துபோனதுடன், ஆறு ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.

கோலா நெருஸில்  உள்ள கம்போங்க் தெபாக் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில், ஜாலான் தெங்கு மிசான் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் 16 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை, சாலைப் போக்குவரத்துத் துறையுடன் (RTD) இணைந்து நடத்தப்பட்ட 10 மணி நேர கூட்டு நடவடிக்கையின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கோதிரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, ​​46 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டு, பல்வேறு குற்றங்களுக்காக 228 சம்மன்கள் வழங்கப்பட்டன.

சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களும், பிரிவு 64-இன் கீழ் மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட காவல் தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அதே நடவடிக்கையில், 280 குற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன், 102 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்யப்பட்ட்தாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *