3 ஆம் படிவ மாணவனைத் தாக்கிய 4 ஆம் படிவ மாணவர்கள் அறுவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 20: நேற்று கிளந்தான், பாசிர் மாஸில் உள்ள ஒரு பள்ளியில் 3 ஆம் படிவ மாணவனை அடித்ததாக நான்காம் படிவ மாணவர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் தனது மருமகன் அறைந்து தாக்கப்பட்டு, அவரது பேண்ட் கிழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் அத்தை ஒரு பேஸ்புக் பதிவில் கூறியதாக பெரிட்டா ஹரியான் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியைக் கடந்து சென்ற ஒரு ஆசிரியர் கவனிக்கும் முன்பே அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவரைக் கம்பியால் கழுத்தை நெரித்துகொண்டிருந்ததாக அவர் கூறினார்.

ஆசிரியர் கடந்து செல்லவில்லை என்றால், தனது மருமகன் ஒரு கொடுமைக்காரனின் கைகளில் இறந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

மேலும், ஆறு மாணவர்களின் குடும்பத்தினர் பாதிக்கபப்ட்ட மாணவரின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று வழக்கைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

பாசிர் மாஸ் காவல்துறைத் தலைவர் காமா அசுரல் முகமது இதனை  உறுதிப்படுத்தினார். இன்று காலை அவர்களைக் காவலில் வைக்க போலீசார் விண்ணப்பித்ததாகக் கூறினார்.

இந்த விஷயம் குறித்து போலீசார் பின்னர் அறிக்கை வெளியிடுவார்கள் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *