அரசு ஊழியர்கள் வீட்டில் தேசிய கொடி கட்டாயம் பறக்கவிட வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 13, 

அரசு அதிகாரிகளின் வீடுகளில் தேசிய கொடியைக் கட்டாயம் பறக்க விட வேண்டும் என நெகிரி செம்பிலான் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Aminuddin Harun உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த தேசிய மாதம் முழுவதும் ஜாலோர் கெமிலாங்கை அவர்கள் வசிப்பிடத்தில் பறக்க விட வேண்டும் என Datuk Seri Aminuddin Harun வலியுறுத்தினார். அரசு ஊழியர்களின் தேசப்பக்தியை இதன் மூலமாக அளவிட முடியும் என தாம் நம்புவதாக Datuk Seri Aminuddin Harun தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சுமார் 7,000 அரசு ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் அவர்களின் வசிப்பிடங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவதால் எந்தவொரு சிக்கலும் இருக்காது என Datuk Seri Aminuddin Harun தெரிவித்தார். விடுதலை நாளான ஆகஸ்ட் 31 க்குள் அரசு ஊழியர்கள் அவர்களில் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியிருக்க வேண்டும். செப்டம்பர் 16 மலேசிய நாள் வரையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருக்க வேண்டுமென Datuk Seri Aminuddin Harun வலியுறுத்தினார். தேசியக் கொடி தொடர்பான சர்ச்சைகளில் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஊழியர்கள் சிக்காமல் இருக்க முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என Datuk Seri Aminuddin Harun நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *