தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட பள்ளிக்கூடம்! – பள்ளி நிர்வாகம் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 5,

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பள்ளிக்கூடத்தின் வாசலில் தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது. போர்ட்டிக்சனில் உள்ள சீனப் பள்ளியில் கடந்த வெள்ளிக் கிழமை தேசிய நாளை அங்கீகரிக்கப்பதற்காகப் பறக்கவிட்டப்பட்ட தேசிய கொடியை மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியால் நிறுவப்பட்டதாகவும் தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணத்தில் திட்டமிட்டு இச்சம்பவம் நிகழ்த்தப்படவில்லை என்றும் சம்மந்தப்பட்ட சீனப்பள்ளியில் மேலாளர் வாரியம் ஓர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. 

இச்சம்பவம் சமூகவலைத்தலத்தில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் போர்ட்டிக்சன் தொகுதி பி.கே.ஆர் தலைவரும் மாநகர மன்ற உறுப்பினருமான Datuk Kenny Chiew Chi Kin சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று மாற்றுத்திறனாளியை நேரில் சந்தித்ததாகவும் பள்ளியின் நிர்வாகத்தின் அலட்சியமானச் செயலைக் கண்டித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதால் பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் , பள்ளி மேலாளர் வாரியத்தினர் என பள்ளி சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என Datuk Kenny Chiew Chi Kin வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *