தேசியக் கொடி அவமதிப்பு! காவல்துறையினர் நடவடிக்கை! ஆரோன் அகோ வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 10,

நாட்டின் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான செயல்கள் அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் மேலும் துரிதமாகச் செயல்பட வேண்டும் என ஒற்றுமை அமைச்சு வலியுறுத்துவதாக அதன் அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கேட்டுக்கொண்டார். நாட்டின் இறையான்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான இது மாதிரியான செயல்கள் தனிநபர்களின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறதே தவிர கூட்டு முயற்சியாக அமைச்சு கருதவில்லை என்றும் தனிநபரின் அலட்சியமான செயல்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட எந்தவோர் அமைப்பும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஆரோன் அகோ டகாங் நினைவூட்டினார். 

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் தலைக்கீழாகப் பறக்கவிடுவது அசுத்தமான பகுதிகளில் தேசியக் கொடியைப் பறக்கவிடுவது, பாதிப்பான நிலையில் உள்ள கொடிகளைப் பயன்படுத்துவது என தேசிய கொடியை அவமதிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவான கருத்துகளைச் சமூகத் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டியதில்லை என ஆரோன் அகோ டகாங் நினைவூட்டினார். தவறு என்பது நிகழ்ந்து விட்டால் அதனைச் சுட்டிக்காட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிமை உள்ளது. அவர்களைத் தற்காக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேவேளையில் தவறைச் சுட்டிக்காட்டியதுடன் நிறுத்திக் கொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கையைக் காவல்துறை மேற்கொள்ளும் என்றும் இது தொடர்பாக காவல்துறையினரின் செயல்பாடுகள் விரைந்துள்ளதாகவும் ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *