மத்திய கிழக்கு மோதல்: அரசை குற்றஞ்சாட்ட வேண்டாம் – டத்தோ ஸ்ரீ அகமட் சாஹிட்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப். 2-

மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் மோதல்களின் தாக்கம் மலேசியாவையும் பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அரசை குற்றம்சாட்ட வேண்டாம் என துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தற்போது நிலவும் சூழ்நிலை ஒரு உலகளாவிய நெருக்கடி ஆகும் என்றும், அதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்திலும் உணரப்படுகின்றது என்றும் விளக்கினார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த உலகளாவிய பிரச்சினையை அரசின் தவறாக சித்தரிக்க கூடாது என்றார். இத்தகைய சவால்கள் எந்த ஒரு நாட்டின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “எதிர்க்கட்சியினர் தாங்களே Strait of Hormuz பகுதிக்கு சென்று பாருங்கள் அல்லது மத்திய கிழக்கு  நாடுகளுக்கு சென்று நிலைமையை நேரில் அனுபவித்து பாருங்கள்,” என அவர் வலியுறுத்தினார்.

இந்த உலகளாவிய நெருக்கடியை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தாமல், ஒன்றுபட்டு எதிர்கொள்வதே நாட்டின் நலனுக்கு சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *