வாசல் படியை (தாண்டி) தொட்டுக் கும்பிட்டு செல்வது ஏன்
- Tamil Malar (Reporter)
- 06 Feb, 2026
லட்சுமி சுப்பிரமணியம்
படியை மிதிக்காமல் தாண்டிச் செல்வது, மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கவலைகள் மற்றும் கோபம் போன்ற தீய குணங்களை வாசலுக்கு வெளியிலேயே விட்டுவிட்டு தூய மனதுடன் இறைவனை தரிசிக்கச் செல்வதை குறிக்கிறது இது பணிவையும் படியை தொட்டு வணங்குவது ஆன்மீக ரீதியாக நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகவும் நம்பப்படுகிறது.
கோவிலில் வாசல் படியை தொட்டுக் கும்பிட்டு செல்வது ஏன்?
கோவிலில் வாசல் படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிட்ட பிறகு தான் கோயிலின் உள் செல்வர். வாசல் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.
நம்மில் பலபேருக்கு கோவில் படியை தாண்டி செல்ல வேண்டுமா.? அல்லது மிதித்து செல்ல வேண்டுமா.? என்ற குழப்பம் இருக்கும். கோவிலுக்கு செல்லும்போது கோவிலுக்கு அருகில் உள்ள நீர் நிலைகள் அல்லது குழாய் நீரில் கை கால்களை கழுவி விட்டு தலையில் சில துளிகள் தண்ணீரை தெளித்து விட்டு போக வேண்டும்.கோவிலுக்குள் செல்லும் முன்பாக கோவில் கலசத்தையும் கோபுரத்தையும் வணங்கிவிட்டு போக வேண்டும். கோவில் படியை வலது கையால் தொட்டு வணங்கி விட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
கோவிலில் உள்ள படியை தாண்டி செல்வது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், குழப்பங்கள், கவலைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தையும் விட்டு விட்டு தூய மனதோடு கோவிலுக்குள் செல்வதை குறிக்கிறது. இதுவே ஐதீகமும் கூட. எந்தவித தீய எண்ணங்களும் இல்லாமல் உன்னை வணங்க வந்துள்ளேன் என்பதாகும். எனவே, கோவிலில் உள்ள படியை தாண்டி செல்வது தான் நல்லது.
இதுவே கோவில் படிக்கட்டை தாண்டாமல் மிதித்து சென்றால் நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், குழப்பங்கள், கவலைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தையும் கூடவே கூட்டி கொண்டு, கோவிலுக்குள் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



