எப்.ஏ கிண்ணத்தை வென்றது ஜொகூர், மாநில முழுவதும் விடுமுறை

top-news

ஜொகூர் பாரு, டிச. 15-

ஜொகூர் டாருல் தக்ஸிம் (ஜேடிதி) அணி 2025 எப்.ஏ கோப்பையை வென்றதைக் கொண்டாடி, ஜொகூர் மாநில அரசு இன்று (டிசம்பர் 15) முழு மாநிலத்துக்கும் சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது. இறுதிப் போட்டியில் சபா எப்.சி.யை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, ஜேடிடி தொடர்ச்சியாக நான்காவது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது.

மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த அறிவிப்பு ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் உத்தரவுப்படி வழங்கப்பட்டதாகக் கூறினார். ஜேடிதியின் அபார வெற்றியை கொண்டாடவும், கால்பந்தில் அணியின் ஆதிக்கத்தை பாராட்டவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

"எனினும், நாளை நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம். தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இதனால் மாணவர்களின் தயாரிப்பும், தேர்வு பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படாது" என்று ஓன் ஹபீஸ் தெரிவித்தார்.

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜேடிதி முழு ஆதிக்கம் செலுத்தியது. வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தின் உயர் அர்ப்பணிப்பே அணியை நாட்டின் முன்னணி சக்தியாக தொடர்ந்து வைத்திருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *