ஜப்பான் மேற்கு கடற்கரையில் 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் – சுனாமி எச்சரிக்கை இல்லை

top-news

தோக்கியோ, ஜன. 6-

ஜப்பான் நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியான ஷிமானே மாகாணத்தில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) , உள்ளூர் நேரப்படி காலை 10:18 மணிக்கு கிழக்கு ஷிமானே பகுதியில் மையம் கொண்ட இந்தப் பூகம்பம் பதிவாகியுள்ளது. இதுவரை பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதன் அளவை 5.7 ஆகப் பதிவு செய்துள்ளது. பூகம்பம் யாசுகி நகருக்கு அருகில் வலுவாக உணரப்பட்டது. ஷிமானே, அண்டை மாகாணமான டொட்டோரியில் ஜப்பான் அளவுகோலில் உச்ச 5+ தீவிரம் பதிவாகியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *