சிலாங்கூர் நெகிரி செம்பிலானில் காற்று மாசு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 20 Jul, 2025
ஜூலை 20,
மலேசியாவில் பரவி வரும் காற்று மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் முக்கிய செயல்திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாகத் தேசிய சுற்றுச்சூழல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இன்று காலை சிலாங்கூர் நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களில் காற்று மோசமாக மாசு அடைந்திருப்பதைத் தேசிய சுற்தறுச் சூழல் ஆணையம் சுட்டிக்காட்டியது. இந்த காற்று மாசு குறியீடு கடந்த 24 மணி நேரங்களாகக் கணக்கிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில்
காற்று மாசு 155 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் நெகிரி செம்பிலானில் 156 என
கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது அதிகமான காற்று மாசு அளவீடு என்றும்
பொதுமக்கள் அவசியமற்ற வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் தேசிய சுற்றுச்சூழல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் காற்று மாசு மலேசியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதன் மேற்கட்ட ஆய்வுகளைத் தேசிய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



