டிரம்பிடம் மன்னிப்பு கோரி ஜோ லோ மனு? – அமெரிக்க ஊடகம் தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 13-

1எம்பிடிபி (1MDB) நிதி முறைகேடு வழக்கில் தேடப்பட்டுவரும் தொழிலதிபர் Low Taek Jho, அல்லது Jho Low, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிடம் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Wall Street Journal (WSJ) வெளியிட்ட செய்தியின் படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த மன்னிப்பு கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்த தகவலை அறிந்த வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கப்பட்டால், ஜோ லோ மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றவியல் வழக்குகளும் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், அமெரிக்க நீதித்துறை அமைச்சகத்தின் (DOJ) இணையதளத்தில் “Taek Jho Low” என்ற பெயரில் இன்னும் பரிசீலனையில் உள்ள மன்னிப்பு கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *