நஜிப் வீட்டுக் காவல் மனு நிராகரிப்பு: யோ பீ யின் கொண்டாட்ட பதிவுக்கு அம்னோ கடும் கண்டனம்
- Tamil Malar (Reporter)
- 23 Dec, 2025
குவாந்தான், டிச. 23-
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் கஜாங் சிறையில் தண்டனையைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிஏபி பிரச்சார செயலாளர் யோ பீ யின் வெளியிட்ட கருத்து, அம்னோ தலைவர்கள் உட்பட பகாங் அம்னோவினரிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அநாகரிகமான செயல் என்று கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று நஜிப் தாக்கல் செய்த நீதித்தன்மை மறுஆய்வு மனுவை நிராகரித்தது. வீட்டுக் காவலில் மீதமுள்ள தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் அரச கூடுதல் உத்தரவை நிறைவேற்ற கோரிய மனு இதுவாகும். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றத்தில் நஜிப் குற்றவாளியாக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் அம்னோவின் முன்னாள் தலைவரும் ஆவார்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான யோ பீ யின், 'இந்த ஆண்டு இறுதியைக் கொண்டாட மற்றொரு காரணம்' என்று தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது உம்னோ தலைவர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நஜிபின் ஆதரவாளர்கள் இதை அரசியல் பழிவாங்கல் என்று கூறி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



