அடுக்குமாடி வணிக வளாகத்தில் பாலியல் சேவை! 152 வெளிநாட்டினர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 17 May, 2026
மே 17,
தலைநகர் Changkat அடுக்குமாடிக் வணிகவளாகத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 152 வெளிநாட்டுப் பெண்களைக் குடிநுழைவுத் துறை கைது செய்தது. இன்று அதிகாலை மேற்கொண்ட சோதனையில் சம்மந்தப்பட்ட வணிக வளாகத்திலிருந்த 243 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் 152 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 32 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. வணிக வளாகத்தின் முதல் மாடி முதல் 6 ஆம் மாடி வரையில் பல அறைகள் பாலியல் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் ஒவ்வோர் அறைகளுக்கும் RM50,000 முதல் RM100,000 வரையில் வசூலிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் China, Taiwan, Vietnam, Myanmar, Bangladesh, Indonesia, Turki ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் குறிப்பிட்ட ஒரு சில தொழிலதிபர்கள் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும் பொதுமக்களுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சந்தேகத்தின் பேரில் தேசிய குடிநுழைவுத் துறை சோதனையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



