வணிகத்தில் ஈடுபட்ட 9 வெளிநாட்டினர் கைது!
- Thinagaren Sanggaren
- 01 Oct, 2025
அக்தோபர் 1,
ஜொகூர்பாருவில் உள்ள வணிகக் கடைகளை ஆக்கிரமித்து வணிகத்தில் ஈடுபட்ட 9 வெளிநாட்டினர்களை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர். இன்று காலை ஜொகூர் பாருவில் உள்ள 20 கடைகளில் இச்சோதனையை மேற்கொண்டதாகவும் 22 முதல் 62 வயதிற்குட்பட்ட 9 வெளிநாட்டினர்கள் எந்தவோர் ஆவணங்களும் இல்லாமல் வணிகத்தில் ஈடுப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO Mohd Rusdi தெரிவித்தார்.
ஒரு சில வணிகக் கடைகள் உள்ளூர்வாசிகளின் பெயரின் அனுமதிப் பெற்றிருந்தாலும் வெளிநாட்டினர்களால் அந்த வணிகக் கடைகள் செயல்பட்டு வருவதாக Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 9 வெளிநாட்டினர்களும் India, Pakistan, Bangladesh, Indonesia, Myanmar ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் எந்தவோர் ஆவணங்களும் இல்லாது மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO Mohd Rusdi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



