தொழில்சாலையில் தங்கியிருந்த 149 வெளிநாட்டினர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 27,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்து வந்த 149 வெளிநாட்டினர்களை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. மாலை 2 மணிக்கு ஜொகூர் SERI ALAM பகுதியில் உள்ள பலகை தொழில்சாலையில் மேற்கொண்ட சோதனையில் 18 முதல் 55 வயதுக்குற்பட்ட 149 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் BANGLADESH, NEPAL, INDONESIA, PAKISTAN, MYANMAR நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட பலகை தொழில்சாலை கடந்த 2022 முதல் இயங்கி வருவதாகவும் கடந்த 2025 முதல் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் ஏதும் இல்லாது வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தியிருப்பதாகவும் தெரிய வந்த நிலையில் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO MOHD RUSDI DARUS தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *