41,073 சட்டவிரோதக் குடியேறிகள் - 1,589 முதலாளிகள் கைது!
- Sangeetha K Loganathan
- 21 Nov, 2024
நவம்பர் 21,
நாடு முழுவதும் தேசிய குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் நவம்பர் 13 வரையில் 41,073 சட்டவிரோதக் குடியேறிகளும் அவர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்க வைத்திருந்த 1,589 வணிக முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Saifuddin Nasution நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசியக் குடிநுழைவுத் துறையும் மாநில அதிகாரிகள் மூலமாக மலேசியா முழுவதும் 17,745 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். உற்பத்தி, கட்டுமானம், சேவைகள், தோட்டங்கள், விவசாயம், வீட்டு உதவி, சுரங்கம் ,குவாரி என முக்கிய வேலைக்காக மலேசியாவுக்குள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,438,468 என தேசியக் குடிநுழைவுத் துறையின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
JIM menangkap 41,073 PATI dan 1,589 majikan dalam 17,745 operasi setakat 13 November, dengan 2.44 juta pekerja asing berdaftar. Operasi bersepadu terus dilakukan untuk keselamatan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *