பெண்களை அடிமையாக வைத்திருந்த மூவர் கைது! 17 வெளிநாட்டுப் பெண்கள் மீட்பு!
- Thinagaren Sanggaren
- 27 Aug, 2025
ஆகஸ்ட் 27,
சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களை மலேசியாவுக்குக் கடத்தி அவர்களை அடிமையாக வைத்திருந்த 3 பேர் கொண்ட ஒரு கும்பலைப் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. நேற்றிரவு பகாங் தெமர்லோ மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையின் போது வணிக வளாகத்தின் மேல் மாடியில் குடியிருந்த 17 இந்தோனேசிய நாட்டுப் பெண்களைச் சோதனையிட்டதாகவும் அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட ஒரு கும்பலால் அடிமையாக்கப்பட்டிருப்பதாகவும் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Nursafariza binti Ihsan தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட 17 இந்தோனேசிய பெண்களைக் கட்டாயப்படுத்தி குறைந்த ஊதியத்தில் துப்புரவு பணிகளுக்காகவும் அன்றாடக் கூலி வேலைக்காகவும் பயன்படுத்தியதாக நம்பப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர் இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளரையும் அவரின் இரு உதவியாளர்களையும் விசாரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட 12 இந்தோனேசிய பெண்களும் சுகாதாரப் பரிசோதனைக்காக பகாங் மாநிலச் சமூக நலத்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Nursafariza binti Ihsan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



