ஜொகூர் சட்டமன்றத்தில் குழப்பம்! – எதிர்கட்சிகள் கண்டனம்!
- THINAGAREN SANGGAREN
- 07 May, 2026
மே 7,
ஜொகூரின் மெந்திரி பெசாராக இருக்கும் Datuk Onn Hafiz Ghazi ஆட்சி முறைகளை மீறி ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாக எதிர்கட்சியின் பெர்சத்து மூடா பாஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் செயல்பாடுகளில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதாகப் பெர்சத்து கட்சியின் ஜொகூர் மாநில் இளைஞர் பிரிவுத் தலைவர் Alias Rasman குற்றம்சாட்டிய நிலையில் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனத்தில் மெந்திரி பெசார் தெளிவற்ற செயல்படுவதாக மூடா கட்சியின் தலைவரும் PUTERI WANGSA சட்டமன்ற உறுப்பினருமான Amira Aisya Abd Aziz தெரிவித்தார்.
ஜொகூர் ம்ந்திரி பெசாரான Datuk Onn Hafiz Ghazi ஜொகூர் மாநிலத்தில் புதிதாக 4 துணை சட்டமன்றங்களை நியமிப்பதற்கான சட்டத்திருத்ததைத் தாக்கல் செய்துள்ளார். பாரிசானின் பெரும்பான்மையில் 4 புதிய சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பது, தேர்தலில் வெற்றிப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை ஒதுக்குவதற்குச் சமம் என கூட்டணியில் இருக்கும் டி.ஏ.பி , பி.கே.ஆர் , அமானா கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



