ஜொகூர் குடிநுழைவு அலுவலகத்தில் கைகலப்பு! காவல்துறை விசாரணை!
- Thinagaren Sanggaren
- 14 Nov, 2025
நவம்பர் 14,
ஜொகூரில் உள்ள Sultan Iskandar குடிநுழைவுக் கட்டிடத்தின் பேருந்து நிறுத்தத்தில் இருவர் கைகலப்பில் ஈடுபடும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாக தென்ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பான காணொலியைப் பொதுப்போக்குவரத்து இலாகா அதிகாரிகள் காவல்துறைக்கு வழங்கியிருப்பதாகவும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையின் நடவடிக்கைகளை அதிகப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தென்ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.
குடிநுழைவின் சோதனையில் தாமதமாகியதை அடுத்து பயணிகள் இருவரும் பொறுமையை இழந்து கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணிக்கு நிகழ்ந்திருப்பதாகவும் சம்பவத்தின் போது அங்கிருந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் தென்ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat கேட்டுக்கொண்டார். கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரையும் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களைக் கண்காணித்து வருதவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



