ஜொகூர் தொழில்சாலையில் பதுங்கி இருந்த 80 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 07 Jul, 2026
ஜூலை 7,
ஜொகூரில் பிரபல உணவு தயாரிப்பு தொழில்சாலையில் பதுங்கியிருந்ததாக நம்பப்படும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 வெளிநாட்டினர்களை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. ஜொகூர் LARKIN பகுதியில் இயங்கி வந்த அந்த தொழில்சாலையில் வழக்கத்திற்கு மாறாக, அதிகமான வெளிநாட்டினர்களின் நடமாட்டத்தைக் கண்டதால் நேற்று காலை 9 மணிக்கு இச்சோதனையை மேற்கொண்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 44 பெண்களும் 36 ஆண்களும் 19 முதல் 48 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் PAKISTAN, BANGLADESH, INDONESIA, MYANMAR ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மந்தப்பட்ட தொழில்சாலையில் வேலை செய்வதற்கான எந்தவோர் ஆதரமும் இல்லாததால் அவர்கள் அந்த தொழில்சாலையில் தங்க வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை மேல்விசாரணை செய்து வருவதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



