ஜொகூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 45 வெளிநாட்டினர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 09 Nov, 2025
நவம்பர் 9,
இன்று நள்ளிரவு ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் ஜொகூர் பாருவில் உள்ள TAMAN MOUNT AUSTIN வணிகப் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 45 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் சட்டவிரோதமாக வேலை செய்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Daru தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் 45 வெளிநாட்டினர்களில் 39 ஆண்கள் 6 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indonesia, Pakistan, India, Myanmar ஆகிய நாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்கு வந்து குறைந்த சம்பளத்திற்கு அவர்கள் வேலை செய்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது நவடிக்கையின் போது 9 வயது சிறுவனும் அவர்களுடன் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது, சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருக்கும் மியன்மார் தம்பதியரின் மகன் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Daru தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



