குற்றப் பின்னணி உள்ள 17 வெளிநாட்டினர் கைது! குடிநுழைவுத் துறை அதிரடி!
- Thinagaren Sanggaren
- 30 Sep, 2025
செப்டம்பர் 30,
ஜொகூர் குடிநுழைவுத் துறையினர் பொழுதுபோக்கு மையங்களிலும் கேளிக்கை மையங்களிலும் நடத்திய சோதனையில் 17 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 17 வெளிநாட்டினர்களும் 18 முதல் 44 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட
17 வெளிநாட்டினர்களில் நான்கு வங்கத்தேசத்தைச் சேர்ந்த ஆண்கள், நான்கு இந்தோனேசியாவைச்
சேர்ந்த ஆண்கள் என்றும், இவர்கள் 8 பேரும் பல்வேறுக் குற்றச்செயல்களுக்காகத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள்
என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர்
Datuk Mohd Rusdi Mohd
Darus தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட 9 பெண்களும்
சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மலிவு விலையில் ஆபாச நடனங்கள் ஆடும் பெண்கள் என்றும்
தெரிய வந்திருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



