ஜொகூரில் 123 வெளிநாட்டினர்கள் கைது! தொழில்சாலையில் குடிநுழைவுத் துறை சோதனை!
- Thinagaren Sanggaren
- 17 Nov, 2025
நவம்பர் 17,
ஜொகூர் பாருவில் உள்ள நெகிழி தொழில்சாலையில் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட 123 வெளிநாட்டினர்களை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. குறைவான ஊதியத்திற்காக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்துவதாகச் சம்மந்தபட்ட தொழில்சாலையின் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு 7 மணிக்கு இச்சோதனையை மேற்கொண்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 123 வெளிநாட்டினர்களும் NEPAL, BANGLADESH, MYANMAR, INDIA, PAKISTAN, INDONESIA நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 50 பெண்கள் 73 ஆண்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் 20 முதல் 48 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார். சோதனை நடவடிக்கையின் போது தொழிலாளர் தங்கும் விடுதியிலிருந்து சிலர் தப்பியதாக நம்பப்படுவதாகவும் அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



