மது போதையில் காவல் அதிகாரிகளை மோதிய வாகனமோட்டி கைது!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 8,

ரோந்து காவலில் இருந்த இரு காவல் அதிகாரிகளைக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் இரு காவல் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நேற்று ஜாலான் ஜொகூர் பாருவிலிருந்து ஆயேர் ஈத்தாம் செல்லும் சாலையில் அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்ததாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனமோட்டி 23 வயது உள்ளூர் இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியதற்காகவும் குடி போதையில் வாகனம் செலுத்தியதற்காகவும் விபத்தை ஏற்படுத்திய 23 வயது இளைஞரைக் காவல்துறை கைது செய்து 2 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar தெரிவித்தார். படுகாயம் அடைந்த இரு காவல் அதிகாரிகளும் 29 வயது 36 வயது போக்குவதரத்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தற்போது Sultanah Aminah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *