ஜொகூர் டாருல் தக்சிம் பினாங்கு அணியை 6-0 கோல்கணக்கில் வீழ்த்தியது
- Tamil Malar (Reporter)
- 12 Sep, 2025
இஸ்கண்டர் புத்ரி, செப். 13-
செய்தி-வெற்றி மைந்தன்
ஜொகூர் டாருல் தக்சிம் அணி, சுல்தான்
இப்ராகிம் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் பினாங்கு அணியை 6-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. தெற்கின்
புலிகள் என்று அழைக்கப்படும் ஜேடிதி அணி, பயிற்சியாளர் ஸிஸ்கோ முனோஸின் வழிகாட்டுதலின் கீழ் ஆட்டத்தின்
தொடக்கத்திலிருந்தே முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்தில், ஆரிப் ஐமான் ஹனாபியின்
அற்புதமான உதவியைப் பயன்படுத்தி, ஜைரோ
டா சில்வா தலையால் முட்டி முதல் கோலைப் பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஆரிப் ஐமான் 18-ஆவது
நிமிடத்தில் ஜேடிதியின் இரண்டாவது கோலை அடித்து அணியின்
முன்னிலையை உறுதிப்படுத்தினார். 31-ஆவது நிமிடத்தில்,
ஆரிப் ஐமான் தனது இரண்டாவது தனிப்பட்ட கோலைப் பதிவு செய்து, ஜேடிதியை 3-0 என்ற முன்னிலையில் வைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



