வானத்தை முட்டும் கட்டிடங்கள் மட்டும் வளர்ச்சி அல்ல! - துணை அமைச்சர் யுனேஸ்வரன்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 6,

ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சி தெற்குப் பகுதிகளில் மட்டுமல்லாமல், வட பகுதிக்கும் சமமான வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார். ஜொகூர் பாரு மற்றும் தெற்கு ஜொகூர் அம்மாநிலத்தின் முக்கியப் பொருளாதார மையங்களாக விளங்கினாலும், சிகாமாட், தங்காக், மூவார் உள்ளிட்ட வடப் பகுதிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கக் கூடாது என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வடப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜொகூர் பாரு
, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்முனைவோர் அதிகப் போக்குவரத்து செலவால் பாதிக்கப்பட்டு வருவதையும் யுனேஸ்வரன் சுட்டிக்காட்டினார். சிகாமாட் உள்நாட்டு துறைமுகத்தை (Segamat Inland Port – SIP) மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வடக்கு ஜொகூர் மக்களுக்குப் பயனாக இருக்கும் என காமாட் நாடாளுமன்ற உறுப்பினரான யுனேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

சிகாமாட் உள்நாட்டு துறைமுகம் மட்டுமே போதுமானதல்ல என்றும்
, வடக்கு ஜொகூரின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த ஜொகூர் மாநில அரசு இணக்கமான வழிமுறைகளை ஒற்றுமை அரசாங்கத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரான யுனேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *