தமிழ்ப்பள்ளியை நோக்கி தர குறியீட்டுப் பயணம்!

top-news
FREE WEBSITE AD

(சங்கர் வேலுவேலு)

மூவார் மார்ச் 30-

அண்மையில் புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரின் தலைமையில் 1 லனட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளியை நோக்கி தர குறியீட்டுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் மிகவும் பயனுள்ள அனுபவமாக அமைந்தது.

பல கருத்துகள் பரிமாற்றம் மற்றும் அனுபவ பகிர்வுகள் பள்ளித் திட்டங்களுக்கு வரும் காலங்களில் உத்வேகமாக அமையவுள்ளது. மேலும் இம்முயற்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பள்ளியின் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்பொன்னான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கங்காதரன் நன்றி கூறுவதோடு அப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களையும் சிறப்பாக வரவேற்று பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்ட லனட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் அவர்களுக்கும் மற்றும் லனட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் அனைவருக்கும் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் நன்றிகளைத் தெரிவித்து கொண்டனர்.

SJKT Ladang Bukit Asahan mengadakan lawatan akademik ke SJKT Ladang Lanadron di bawah pimpinan guru besarnya. Semua guru terlibat, berkongsi pengalaman dan idea untuk memperbaiki pendidikan. Kedua-dua sekolah berterima kasih atas peluang ini yang memberi manfaat kepada guru dan pelajar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *