விபத்தில் 10 பேர் காயம் – எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநரின் PSV உரிமம் இடைநீக்கம்

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், மார்ச் 10-

ஜொகூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 10 பயணிகள் காயமடைந்ததைத் தொடர்ந்து, அந்த எக்ஸ்பிரஸ் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரின் தொழில்முறை ஓட்டுநர் உரிமம் (PSV) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் சாலை போக்குவரத்து துறை (JPJ) அறிவித்துள்ளது.

JPJ தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ரம்லி கூறுகையில், சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை ஓட்டுநரின் PSV உரிமம் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த விபத்து கடந்த முன்தினம் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஜொகூர் பாரு–ஆயிர் ஹித்தாம் சாலையின் 19ஆவது கிலோமீட்டரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட பேருந்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிலையை ஆய்வு செய்ய JPJ அமலாக்க குழுவுக்கு JPJ Inspection & Safety Audit (JISA) எனப்படும் சிறப்பு பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மூலம் வாகனத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்வார்கள் என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *