அனைத்து சம்மன்களுக்கும் 50% கழிவு! ஜனவரி முதல் தொடக்கம்! – அந்தோணி லோக்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 23,

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அனைத்து வகையான சாலை போக்குவரத்து சம்மன்களுக்கும் 50% கழிவு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். போக்குவரத்து விதிகளை மீறுவதால் பெறப்படும் சம்மன்களை அதன் காலவரைக்குள் செலுத்தினால் இந்த கழிவு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் The Less You Delay, The Less You Pay கொள்கை முழுமையாக அமலுக்கு வரும் என அந்தோணி லோக் உறுதியளித்தார்.

அபராதம் விதிக்கப்பட்ட 1 முதல் 15 நாள்களுக்குள் தொகையைச் செலுத்துபவர்களுக்கு 50 விழுக்காடு கழிவு என்றும் 16 முதல் 30 நாள்களுக்குள் செலுத்துபவர்கள் 33 விடுக்காடு கழிவு என்றும், 31 முதல் 60 நாள்களுக்குள் செலுத்தினால் முழு அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும் என அந்தோணி லோக் விளக்கமளித்தார்.  காப்பீடு இல்லாமல் வாகனத்தைச் செலுத்துதல், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, போலியான வாகன உரிமம் கொண்டிருத்தல் போன்ற கடுமையான குற்றங்களுக்குக் கழிவுகள் வழங்கப்படாது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *