ஒரே நாளில் 716 சம்மன்கள்! 167 வாகனங்கள் பறிமுதல்! – பகாங் JPJ!
- Thinagaren Sanggaren
- 02 Nov, 2025
நவம்பர் 2,
சாலை போக்குவரத்து ஆணையமான JPJ நேற்று பகாங்கில் மேற்கொண்ட Ops Target வாகனச் சோதனையில் 716 சம்மன்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாந்தானில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் மொத்தம் 1,540 வாகனங்களைச் சோதனையிட்டதாகவும் 115 வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்காதது 115 வாகனங்களுக்குக் காப்பிடுகள் இல்லாதது போன்ற குற்றங்களுக்காகச் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகப் பகாங் மாநிலச் சாலைபோக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணிவரையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பகாங் மாநிலச் சாலைபோக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆடம்பரப் பதிவு எண்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்காகவும் அரசு முத்திரைகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்காகவும் 167 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பகாங் மாநிலச் சாலைபோக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



