போதைபொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 9 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 9,

 வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தை செலுத்திய 9 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு 11 மணிக்கு ரவாங்கிலிருந்து பினாங்கு வரையிலான வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பயணித்த சந்தேகத்திற்குரிய வாகனங்களில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய சாலை போக்குவரத்து ஆணையமான JPJ தெரிவித்துள்ளது. 

 சாலை விதிமுறைகளை மீறியதாக 68 வாகனங்களுக்குப் பல்வேறு குற்றப் பிரிவுகளில் 136 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலை உரிமம் இல்லாமல் வாகனத்தை செலுத்திய 3 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தை செலுத்திய 9 உள்ளூர்வாசிகளையும் மேலதிக விசாரணைக்காக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் 12 வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் தேசிய சாலை போக்குவரத்து ஆணையமான JPJ தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *