திரங்கானுவில் அதிகரிக்கும் போக்குவரத்து குற்றங்கள்! 16,396 சம்மன்கள்! – JPJ TERENGGANU
- Thinagaren Sanggaren
- 21 Dec, 2025
டிசம்பர் 21,
திரங்கானுவில் அதிகமான மோட்டார் சைக்கிளோட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதாகத் திரங்கானு மாநிலப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் நேற்று வரையில் மொத்தம் 16,396 மோட்டார் சைக்கிள்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாக திரங்கானு மாநிலப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Mohd Zamri Samion தெரிவித்தார். மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 81,107 மோட்டார் சைக்கிள்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக Mohd Zamri Samion தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்காதது, சமிஞ்சை விளக்குகளை மீறுதல், சாலையில் எதிர்திசையில் பயணித்தல், தலைகவசம் அணியாததல், மோட்டார் சைக்கிள்களின் பாகங்களைச் சட்டவிரோதமாக மாற்றி அமைத்தல், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுதல் என பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் காவல்துறையும் போக்குவரத்து ஆணையமும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக Mohd Zamri Samion தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் 342 வாகனங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டதுடன் வாகனத்தின் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் திரங்கானு மாநிலப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Mohd Zamri Samion தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



