தலைநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 130,000 மேற்பட்ட சம்மன்கள்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 27,

தலைநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்கு வாகனமோட்டிகளுக்கு மொத்தம் 137,192 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் சாலைப்போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் செலுத்தியதற்காக 26,098 சம்மன்களும் மோட்டார் சைக்கிள் உரிமம் இல்லாதத்தற்காக 21,277 சம்மன்களும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் சாலைப்போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மொத்தம் 176,536 வாகனங்களைச் சோதனையிட்டதாகவும் அதில் 46,119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் சாலைப்போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார். கடுமையான குற்றங்களுக்காக இதுவரையில் 955 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தலைநகரில் உரிமம் இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாகப் பல்வேறு சாலைகளில் கோலாலம்பூர் சாலைப்போக்குவரத்து ஆணையம் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடும் என அதன் இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *