போக்குவரத்து விதிகளை மீறிய 21 வாகனங்கள் பறிமுதல்! நால்வர் கைது! – JPJ KUALA LUMPUR!

top-news
FREE WEBSITE AD


ஜனவரி 28,

தலைநகர் PLUS நெடுஞ்சாலையில் கோலாம்பூர் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட சோதனையில் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நம்பப்படும் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணிக்கு PLUS நெடுஞ்சாலையில் பயணித்த 2,091 வாகனங்களை ஆய்வு செய்ததில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு மொத்தம் 382 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கோலாம்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்துகள் முறையான சுற்றுலா ஆவணங்களைக் கொண்டிருக்காததால் 2 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சாலை போக்குவரத்து சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கோலாம்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகமாகச் சம்மன்கள் பெறும் பேருந்துகளின் நிறுவன உரிமத்தை ரத்து செய்யவுள்ளதாக கோலாம்பூர் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரும் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கோலாம்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *