பாக்கிஸ்தானியர்களுக்குச் சிறப்பு குடியுரிமையுடன் MYKAD! JPN விளக்கம்!

top-news

ஜூன் 25,


மலேசிய குடிமக்களுக்கான அடையாளமாக இருக்கும் MYKAD-களை தகுதியானப் பாக்கிஸ்தானியர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தேசியப் பதிவுத் துறை (JPN) மறுத்துள்ளது. பாக்கிஸ்தானியர்களுக்குச் சிறப்புக் குடியுரிமை எனும் போர்வையில் MYKAD வழங்கப்பட்டிருப்பதாக Mohd Izaz Abit எனும் ஆடவர் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேசியப் பதிவுத் துறை (JPN) இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பாக்கிஸ்தானைச் சேர்ந்த Abd Rauf Hamzah, Mohd Abzah Ulamai, Said Bashar Shah Zadar என்பவர்களுக்கு முதலீடு வர்த்தகர்கள் எனும் அடிப்படியில் குடியுரிமை வழங்கப்பட்டாலும் அவர்களுக்கு நிறந்தரக் குடியுரிமை இல்லை என தேசியப் பதிவுத் துறை (JPN) விளக்கமளித்துள்ளது. அதேவேளையில் Mohd Izaz Abit எனும் ஆடவர் போலி ஆவணங்கள் மூலமாக அடையாள அட்டையை பெற்றிருப்பதாகவும் மலேசியாவைச் சேர்ந்த ஒருவரின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு அவர் குடியிரிமைக்கான விண்ணப்பத்தைச் செய்ததற்காகத் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தேசியப் பதிவுத் துறை (JPN) தெரிவித்துள்ளது.


Jabatan Pendaftaran Negara (JPN) menafikan dakwaan MYKAD diberi kepada warganegara Pakistan secara tidak sah. Individu terlibat, Mohd Izaz Abit, disiasat kerana menggunakan dokumen palsu dan identiti rakyat tempatan untuk memohon kewarganegaraan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *