600 இடங்களில் Jualan Rahmah MADANI திட்டம் விரிவுப்படுத்தப்படும் - அன்வார்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

மடானி மலிவு விலை பொருள்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய நாட்டின் 600 இடங்களில் Jualan Rahmah MADANI திட்டம் விரிவுப்படுத்தப்படவிருப்பதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.  கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது அரசாங்கத்தின் மானிய விலைகளுக்கு RM300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும் தற்போது நாடு முழுவதும் மலிவு விலையில் அரசாங்கத்தின் மானியத்துடன் வீட்டுப் பொருள்கள் விற்பனைக்கும் மேலும் RM300 மில்லியன் கூடுதலாக வழங்கப்படுவதாகவும் இதனால் புறநகர் வாழ் மக்களும் Jualan Rahmah MADANI திட்டத்தில் பயன்பெறுவார்கள் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். 

இது வரையில் மானிய விலை பொருள்களுக்காக நாடு முழுவதும் 8,600 சிறு வணிகர்கள் பயன்பெற்று வந்த நிலையில் தற்போது விரிவுப்படுத்துவதால் நாடு முழுவதும் 560 சட்டமன்றத் தொகுதிகள் கூட்டரசு வளாகங்கள் என சுமார் 600 இடங்களில் உள்ள சிறு குறு வணிகர்கள் அதிகமாகப் பயன்பெறுவார்கள் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். இது வரையில் 40 கிராமங்களில் செயல்பட்டு வந்த Jualan Rahmah MADANI திட்டம் இனி கூடுதலாக 200 கிராமங்களில் செயல்படும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *