சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் JUALAN RAHMAH மலிவு விலையில் சந்தை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 29, 

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு ஆணையமான PKPS சிலாங்கூரின் முக்கிய 5 மாவட்டங்களில் JUALAN RAHMAH மலிவு விலை சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்கி DUSUN TUA, SIJANGKANG, KOTA KEMUNING, SEMENTA, PANDAN INDAHகிய 5 மாவட்டங்களில் இந்த மலிவு விலை சந்தைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இரவு 7 மணி வரையில் இந்த சந்தைகள் செயல்படும் என சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு ஆணையமான PKPS தெரிவித்துள்ளது.

அடிப்படை சமையல் பொருள்களானக் கோழி இறைச்சி வகைகள் மலிவு விலையிலும், முட்டை ஒரு தட்டு 10 ரிங்கிட்டுக்கும், 2 கிலோ சமையல் எண்ணெய் 10 வெள்ளிக்கும் 5 கிலோ உள்ளூர் அரிசி 23 ரிங்கிட்டுக்கும் என சிலாங்கூர் மாநில அரசின் மானிய விலையுடன் வழங்கப்படுகிறது. சிலாங்கூர் முழுவதுமாக மேற்கொள்ளப்படும் JUALAN RAHMAH மலிவு விலை சந்தைகள் குறித்தான விவரங்களை MYPKPS.my அகப்பக்கத்தின் வாயிலாக அறியலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *