தலை துண்டிக்கப்பட்டு, பெண் படுகொலை! 11 வயது சிறுமியும் படுகொலை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 19,

நேற்றிரவு பினாங்கு ஜூருவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தையும் சிறுமியின் சடலத்தையும் காவல்துறையினர் மீட்டனர். நேற்றிரவு 7.30 மணிக்குக் குடியிருப்புவாசிகளிடமிருந்து தகவல் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Azizee Ismail தெரிவித்தார். வீட்டின் சமையலறையில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாகவும் வீட்டின் முதல் மாடியில் சிறுமியின் உடல் முழுவதும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் 51 வயதுள்ள உள்ளூர்வாசி என்றும் சிறுமி 11 வயதுள்ளவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அவர்கள் இந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்ததாகவும் 11 வயது சிறுமி அவர்களின் வளர்ப்பு மகள் என்றும் பக்கத்து வீட்டார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் சம்பவ இடத்தைத் தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டு வருவதாகவும் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Azizee Ismail தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *