மலேசியாவுக்கு எதிரான அமேரிக்காவின் புதிய வரி! நாளை அமைச்சரவையில் விவாதம்! – அமைச்சர் Tengku Zafrul

top-news

ஜூலை 8,


மலேசியா மீது அமேரிக்கா விதித்திருக்கும் புதிய ஏற்றுமதி வரி குறித்து நாளை அமைச்சரவைக் கலந்தாலோசிக்கப்படும் என முதலீடு வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்தார். மலேசியாவுக்கான ஏற்றுமதி வரியை அமேரிக்கா உயர்த்தியிருப்பது வெளிப்படையான பழிவாங்கும் செயலா என்பதையும் அரசு ஆராயும் என Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்தார். நாளை அமைச்சரவையில் இந்த வரி ஏற்றம் குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர் மாலை 6 மணிக்கு மலேசியாவின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாக Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்தார். 

அமேரிக்காவின் இந்த புதிய வரி ஏற்றம் மலேசியாவுக்கு நேரடியாக விடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கும் நிலையில் இது அனைத்துலகப் பொருளாதாரத்தில் மலேசியாவுக்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் தரவுகளுடன் இது குறித்து விளக்கமளித்தாக Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்தார். அமேரிக்காவுக்கும் மலேசியாவுக்குமான முதலீடு வர்த்தகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக முக்கிய பங்கினை வகித்திருப்பதாகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு RM324.9 பில்லியன் ஏற்றுமதிகளை மேற்கொண்டிருக்கப்பட்டதாக இந்த ஆண்டு அதன் வர்த்தக அளவு இந்த வரி ஏற்றத்தால் பாதிக்கப்படும் என்பதை Tengku Datuk Seri Zafrul Abdul Aziz சுட்டிக்காட்டினார்.


Amerika Syarikat mengenakan cukai eksport baharu ke atas Malaysia. Menteri MITI Tengku Zafrul memaklumkan isu ini akan dibincang dalam mesyuarat Kabinet esok. Kerajaan akan menilai kesannya terhadap ekonomi dan mengumumkan pendirian Malaysia selepas itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *