அமைச்சரவையில் பெரிய மாற்றம் இல்லை: பிரதமர்

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், டிச. 1-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தற்போதைய அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றம் செய்யப் போவதில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளார். வெறும் சில காலியிடங்களை மட்டுமே நிரப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், பெரிய மாற்றத்திற்கு தேவையில்லை என்று பிரதமர் விளக்கமளித்தார். “சில காலியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். நீண்ட கால அமைச்சரவையாக இருந்தால் மாற்றம் பற்றி யோசிக்கலாம். ஆனால் இந்த அமைச்சரவை இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் செயல்படும். எனவே பெரிய மாற்றங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று அன்வார் குறிப்பிட்டார்.

இருப்பினும், என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்து வருவதாகவும், காலியிடங்களை நிரப்புவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது சில முக்கிய அமைச்சர்கள் நீக்கப்பட்ட நிலையில், அந்த இடங்களை நிரப்புவது குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது. அடுத்த பொதுத் தேர்தல் 2027-ஆம் ஆண்டுக்குள் நடைபெற வேண்டிய நிலையில், குறுகிய கால அமைச்சரவையை நிலைநிறுத்துவதே அன்வாரின் முன்னுரிமையாக உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *