இஸ்லாம் அல்லாதவர்களை KAFIR என அடையாளப்படுத்தலாமா? – பாஸ் கட்சி விளக்கம்

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 21,

இஸ்லாம் அல்லாதவர்களை KAFIR என அடையாளப்படுத்த வேண்டாம் என பாஸ் கட்சியின் உச்சமன்றத் தலைமைக்குழு வலியுறுத்தும் என பாஸ் கட்சியின் Dr Halimah Ali, Awang Hashim தெரிவித்தனர். பாஸ் கட்சியினர் KAFIR எனும் சொல்லை இஸ்லாம் அல்லாதவர்களைக் குறிக்கும்படியாகப் பயன்படுத்துவது அவர்களை இழிவுப்படுத்துவதாக உணர்வதால் பாஸ் கட்சி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என PENDANG நாடாளுமன்ற உறுப்பினர் Awang Hashim தெரிவித்தார். இஸ்லாம் அல்லாதவர்களைப் பாஸ் கட்சி பாதுகாக்கும் என்பதை நிரூபிக்க KAFIR எனும் சொல்லைப் பாஸ் கட்சியினர் பயன்படுத்த வேண்டாம் என காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Dr Halimah Ali நினைவூட்டினார்.

பாஸ் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதவர் ஆதரவு அணியான DHPP பெரும்பாலானப் பாஸ் கட்சியினர் KAFIR, வந்தேறிகள் போன்ற சொல்லைப் பயன்படுத்துவதால் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் பாஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பதைச் சுட்டிக்காட்டியதை அடுத்து பாஸ் கட்சியின் தலைமை KAFIR எனும் சொல் குறித்து இஸ்லாம் அல்லாதவர்களின் உணர்வைப் புரிந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது. அரபு மொழியில் KAFIR என்பது நம்பிக்கையற்றவர்களையும் இஸ்லாத்தை நம்பாதவர்கள் எந்தவொரு சூழலிலும் துரோகம் செய்யக்கூடியவர்கள் என பொருள் உள்ள சொல். குர்ஆனில் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை எதிர்க்கும் ஒரு தரப்பினரை KAFIR என அடையாளப்படுத்தியுள்ளது. காலப்போக்கில் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களைக் குறிக்கும் ஓர் அடைமொழியாக KAFIR எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *