காஜாங்கில் காட்டுத் தீ! 1.2 HEKTAR காடு கருகியது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 20

நேற்றிரவு காஜாங்கில் உள்ள Kajang Prima காட்டில் ஏற்பட்ட தீயில் மொத்தம் 1.2 HEKTAR காடு கருகியதாக நம்பப்படுகிறது. இரவு 7.36 மணிக்குத் தீ குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 22 தீயணைப்புப் பணியாளர்களுடன் விரைந்ததாகக் காஜாங் மாவட்டத் தீயணைப்பு ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஜாங்கின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் காடு, பாதுகாக்கப்பட்ட மலை என்பதால் மனித நடமாட்டங்கள் இல்லாததைத் தீயணைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

நள்ளிரவு 2 மணி வரையில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு அதிகாரிகள் போராடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KAJANG, BANGI, SEMENYIH  மாவட்டத் தீயணைப்பு அதிகாரிகளும் மலையின் சுற்றம் முழுமையாகத் தீயை அணைக்க போராடியதாகவும் நள்ளிரவு 2 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரையில் எந்தவொரு மனித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும் வன விலங்குகளின் பாதுகாப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *