காஜாங்கில் 29 இந்தோனேசியர் கைது! - குடிநுழைவுத் துறை

top-news

நவம்பர் 13,

தேசியக் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் காஜாங்கில் உள்ள தனியார் விடுதியில் 29 இந்தோனேசிய நாட்டினர்களைக் கைது செய்துள்ளனர். 

கடந்த வாரம் ஆடவர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து ஒரு குழுவைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காத்திருந்து இச்சிறப்புச் சோதனையை மேற்கொண்டதாகத் தேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் 
Zakaria Shaaban தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 50 வயதுக்குற்பட்டவரனகள் என்றும் RM 13,430.00 ரிங்கிட் ரொக்கமும் Toyota Vios ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் காலாவதியானக் கடப்பிதழைக் கொண்டிருந்ததாகவும் மற்றவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான எந்தொவோர் ஆதாரங்களுமில்லை என்பதால் விசாரணை நடத்துவதாக Zakaria Shaaban தெரிவித்தார். 


Jabatan Imigresen menumpaskan sindiket penyeludupan migran Indonesia di Kajang, menahan 29 individu termasuk ahli sindiket dan migran tanpa dokumen sah. Barang rampasan termasuk wang tunai RM13,430 dan Toyota Vios.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *