மீண்டும் UPSR, PT3 அறிமுகம் – அவசர முடிவு அல்ல, முழுமையான ஆய்வின் பின் தீர்மானம்
- Tamil Malar (Reporter)
- 12 Jan, 2026
செர்டாங், ஜன. 12-
யூபிஎஸ்ஆர் (UPSR), மூன்றாம் படிவ மதிப்பீடு (PT3) ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான யோசனை, அவசரமாக எடுத்த முடிவு அல்ல; மாறாக, மலேசியக் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் விரிவான ஆய்வின் அடிப்படையில் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படும் என கல்வித் துறை தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அசாம் அகமத் தெரிவித்துள்ளார்.
எந்தத் தீர்மானத்துக்கும் முன் அனைத்து அம்சங்களும் கவனமாக ஆராயப்பட வேண்டும் என்பதால், ஆய்வு முதலில் நடத்தப்படுவது அவசியம் என்று அவர் மேலும் கூறினார். “இது அவசர முடிவு அல்ல. கல்வி அமைச்சர் படீலினா சிடேக் விரைவில் தேசிய கல்வி ஆலோசனை மன்றம் (MPPK) உடன் இணைந்து நடைபெறும் கலந்தாய்வு மாநாட்டை அறிவிப்பார். அங்கு UPSR , PT3-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டிய தேவைகள் குறித்து விவாதிக்கப்படும்,” என அவர் விளக்கினார்.
மேலும், பொதுமக்களும் கல்வி தொடர்புடைய தரப்பினரும் அந்தக் கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு, தெளிவான புரிதலுடன் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். “முடிவெடுக்கும்போது அனைவரும் பங்கேற்க வேண்டும்; ஆனால் உறுதியான அறிவும் புரிதலும் கொண்ட கருத்துகளே பயனளிக்கும்,” என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



