போலி கோரிக்கைகளைத் தடுக்க SPRM அதிகாரிகள் தேவை – பெர்கேசோ
- Surendran Sumdraraj
- 10 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 10-
பெர்கேசோவின் நலன் கோரிக்கை முறையை வலுப்படுத்தவும், போலி கோரிக்கைகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கவும், ஊழல் தடுப்பு ஆணையம் அதிகாரிகள் அந்த அமைப்பில் பணியமர்த்தப்பட வேண்டும் என பெர்கேசோ கோரிக்கை விடுத்துள்ளதாக பெர்கேசோ குழும தலைமை செயல் அதிகாரி Datuk Seri Dr Mohammed Azman Aziz Mohammed தெரிவித்தார்.
மக்களின் நிதி தொடர்பான கோரிக்கை செயல்முறைகளில் மோசடி மற்றும் ஊழலுக்கான இடைவெளிகள் உருவாகாத வகையில், SPRM-இன் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை வரவேற்கிறோம் என்றார்.
நிர்வாக குறைபாடுகள் காரணமாக, சில இடங்களில் போலி கோரிக்கைகள் மற்றும் தவறான பயன்பாட்டிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“தற்போதைய செயல்முறைகள் எவ்வாறு மேம்படுத்தப்படலாம் என்பதைக் காண SPRM உதவ விரும்புவதை நாங்கள் வரவேற்கிறோம். போலி கோரிக்கைகளுக்கான வாய்ப்புகளை முழுமையாக மூட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



