அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை – ஈரான்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8-

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தற்காப்பு நடவடிக்கையாகும் என்றும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டால் அந்த நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

மலேசியாவிற்கான ஈரான் தூதர் வலியொல்லா முகம்மதி நஸ்ராபாதி இதனை தெரிவித்தார். ஈரான் ஒருபோதும் போரை தொடங்கிய நாடாக இல்லை என்றும், தனது நிலப்பரப்பையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மோதல்களை முடிவுக்கு கொண்டுவர அரசியல் மற்றும் தூதரக வழியே தீர்வு காண வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடாகும் என்றார்.

ஆனால் எந்தவொரு போர் நிறுத்த உடன்பாட்டும் செயல்பட வேண்டுமெனில், ஈரானுக்கு எதிராக நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *