அரசின் கோரிக்கையை மறுத்த அமேரிக்க தூதரகம்!
- Thinagaren Sanggaren
- 03 Oct, 2025
அக்தோபர் 3,
காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க சென்ற 27 மலேசியர்களை உடனடியாக இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்ய வேண்டும் என மலேசியாவில் உள்ள அமேரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்ட கோரிக்கையை அமேரிக்க தூதரகம் நிராகரித்து விட்டதாக பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவரும் பிரதமர் அன்வாரின் செயலாளருமான Kamil Munim தெரிவித்தார். நேற்று மாலை அமேரிக்க தூதரகத்திற்குக் கோரிக்கை மனுவை வழங்க சென்ற நிலையில் தூதரம் கோரிக்கை மனுவை மறுத்ததாகவும் இன்று வெள்ளிக் கிழமை மீண்டும் அமேரிக்க தூதரகத்திற்கு அரசு ஆணையுடன் மனு அளிக்கவிருப்பதாக கமீல் முனிம் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் Global Sumud Flotillaவின் பங்கேற்றிருக்கும் மலேசியர்களை இஸ்ரேல் கைது செய்திருப்பது குறித்து இஸ்ரேலின் ஆதரவு நாடான அமேரிக்கா, மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மலேசியாவில் இருக்கும் அமேரிக்க தூதரகம் தமது கோரிக்கை ஏற்க மறுத்தால் மலேசியாவின் அரசு ஆணையின் மூலமாக மனு அளிக்கப்படும் என்றும் அப்படியான மனுவைத் தூதரகம் மறுக்க முடியாது என்றும் கமீல் முனிம் சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



